ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

Youtube-ல் கால்பதிக்க ஓர் வழிகாட்டி


YouTube-ஐ பொதுவாக காணொளி (video) பார்க்க பயன்படுத்தியிருப்பீர்கள். இது வீடியோ பார்க்கும் தளம் மட்டுமே அல்ல, இது ஒரு Facebook, Twitter, Instagram போன்ற சமூக வலைத்தளம் மற்றும் உலகளாவிய ரசிகர்களின் சமூகமாகும். ஒவ்வொரு நிமிடத்திற்கும் 400 மணிநேரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் YouTube-ல் பதிவேற்றப்படுகின்றன என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

இன்றைய தலைப்பு செய்திகளிலிருந்து சினிமா செய்திகள் வரை, கல்வி சார்ந்த காணொளிகள் முதல் சமையல் குறிப்புகள் வரை, சர்வதேச நிகழ்வுகள் முதல் திருமண நிகழ்வுகள் வரை அனைத்தையும் பார்க்க, பகிர உதவும் தளமாக இருக்கிறது Youtube. தொலைக்காட்சி, செய்தித்தாள் போன்ற
பாரம்பரிய ஊடகங்களை போல் அல்லாமல் Youtube ரசிகர்கள் தங்கள் கருத்துகளை பகிர மற்றும் படைப்பாளிகள் தங்கள் சமூகங்களுடன் தொடர்புகொள்ள உதவும் ஒரு சமூக வலைப்பின்னலாக விளங்குகிறது. எனவே உங்கள் எண்ணம்போல் எதை வேண்டுமானாலும் (விதிகளுக்கு உட்பட்டு) Youtube-ல் பகிரலாம்.

உங்கள் உணர்வுகள், கருத்துகள் மற்றும் பேரார்வங்களை இந்த சமூகத்துடன் பகிர்ந்து ஒரு Youtube நட்சத்திரமாக செய்ய வேண்டியது இதுதான்...
 1. உங்களுக்கான ஒரு Youtube Channel-ஐ உருவாக்குங்கள்.
 2. உங்கள் கருத்துகளை விரும்பும் பார்வையாளர்களின் முன் உங்கள் காணொளிகளை நிறுத்துங்கள்.
 3. தொடர்ந்து அவர்கள் உங்கள் காணொளிகளை காண செய்யுங்கள்.
 4. மறவாமல் அவர்களின் கருத்துகளை கேட்டறிந்து உங்கள் மெருகேற்றிக்கொள்ளுங்கள்.
எளிமையாக உள்ளதல்லவா?

தெளிவான முன்திட்டமிடல் இருந்தால் மிகவும் எளிமைதான். ஆனால் இதற்கு முன்னர் உங்களை நீங்கள் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள் சில உள்ளன...
 • உங்கள் channel-ன் குறிக்கோள் என்ன?
 • உங்கள் பார்வையாளர்களாக சாத்தியமுள்ளவர்கள் யார்?
 • உங்களை போலவே குறிக்கோளுடன் இயங்கும் பிற channel-கள் எவை? (அது பிறமொழி Channel-லாகவும் இருக்கலாம்).
 • அந்த channel-களிலிருந்து உங்களை வேறுபடுத்தி காட்டும் தனித்துவ விஷயம் என்ன?
 • 5 ஆண்டு காலத்தில் உங்கள் channel எவ்வாறு இருக்கும்?
இக்கேள்விகளுக்கு தெளிவான விடை கண்ட பிறகு, உங்கள் Channel-லுக்கான திட்டமிடலை தொடங்கலாம். நீங்கள் திட்டமிட வேண்டிய அடிப்படை விஷயங்கள்:
 • உங்கள் காணொளிகளில் (video) பார்வையாளர்களை கவரும் விஷயம் என்ன.
 • உங்கள் காணொளிகள் எந்த சமூகத்தினருக்கானது (community). இங்கு சமூகம் என நான் குறிப்பிடுவது வயது, பாலினம், வேலை, தொழிற்துறை போன்ற காரணிகளால் ஒன்றுபட்ட குழுக்களை.
 • எந்த ஒரு தனிப்பட்ட சமூகத்தின் தனிப்பட்ட தேவைகளுக்கான உள்ளடக்கத்தை (Niche Content) நீங்கள் உருவாக்க உள்ளீர்கள்.
இந்த முக்கிய விஷயங்களுக்கான தெளிவான பதில்கள் இருப்பின், நீங்கள் வெற்றிகரமான ஒரு Youtube Channel-ஐ தொடங்க தயார்!

நீங்களும் ஒரு Youtube படைப்பாளி ஆக தயாராகிவிட்டீர்களா? நீங்கள் எந்த விஷயத்தை பேசும் channel-ஐ உருவாக்க போகிறீர்கள் என்று comment செய்யுங்கள். மேலும் Youtube படைப்பாளி ஆகுவது குறித்து அறிய எனது அடுத்த பதிவை படியுங்கள்.

உங்கள் கருத்துக்கள் / விமர்சனங்கள் / பரிந்துரைகளை கீழே உள்ள comment box-இல் பகிருங்கள்

புதன், 29 ஆகஸ்ட், 2018

இணையத்தில் வருமானம் ஈட்ட உதவும் Youtube

இணையம் மூலம் சம்பாதிக்கும் எண்ணம் உள்ளவரா நீங்கள்? நீங்கள் அறிந்த கலை அல்லது அனுபவத்தை பிறருக்கு கற்பிக்க தயாரா? அப்பொழுது Youtube-ல் உங்களுக்கென ஒரு channel-ஐ தொடங்கி அவற்றை பதிவிடுவது ஒரு சிறந்த வழி. Youtube-ல் முழு நேர தொழிலாக தேர்தெடுத்த பலரையும் நீங்கள் காணலாம். பகுதி நேர தொழிலாக இதை செய்வோரும் உள்ளனர்.

Video Marketing

Youtube-ல் channel தொடங்குபவர்களுக்கு இரண்டு வருமான வாய்ப்புகள் உண்டு.

1. Google Adsense விளம்பர வருமானம்.

  நம் channel-ஐ Google Adsense-சுடன் இணைப்பதன் மூலம் நம் காணொளிகளில் (video) விளம்பரங்கள் இடம் பெற செய்து வருமானம் ஈட்டலாம். Google தாம் ஈட்டும் விளம்பர வருமானத்தில் ஒரு பங்கை நம்முடன் பகிர்ந்து கொள்ளும்.

2. நம் தனிப்பட்ட விளம்பர வருமானம்.

  நாம் நேரடியாக விளம்பரதாரரின் விளம்பரத்தை நம் காணொளியில் சேர்த்து வெளியிடுவதன் மூலம் ஈட்டும் வருமானம். 
இவ்விரு முக்கிய வருவாய்களை தவிர Superchat, Sponsorship போன்ற பெரிதும் பிரபலமடையாத இதர வருமான ஆதாரங்களும் உள்ளன. அவைற்றை பற்றி நாம் பின்னர் தெரிந்து கொள்வோம்.

Youtube-ஐ பயன்படுத்தி வருவாய் ஈட்டுவது மட்டுமன்றி தனது தொழிலை விளம்பரப்படுத்துவதற்கும் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். மரபு சார்ந்த தொலைக்காட்சி, வானொலி அல்லது செய்தித்தால் ஊடகங்களுடன் ஒப்பிடும்போது, Youtube-இல் விளம்பரப் படுத்துவதில் சில தனிச்சிறப்புகள் உண்டு.

இது குறித்து மேலும் விரிவாக ஆங்கிலத்தில் கற்க விரும்புவோர், Youtube-இன் அதிகாரபூர்வ பயிற்சி தளமான https://creatoracademy.youtube.com எனும் இணையத்தளத்தில் இலவசமாக கற்கலாம். அல்லது இவை குறித்து தமிழிலேயே தெரிந்துகொள்ள விரும்புவோர் காத்திருங்கள். எமது வலை பதிவின் அடுத்தடுத்த இடுகைகளில் இதுகுறித்து நீங்கள் மேலும் தெரிந்துகொள்ளலாம்.

உங்கள் கருத்துக்கள் / விமர்சனங்கள் / பரிந்துரைகளை கீழே உள்ள comment box-இல் பகிருங்கள்

வெள்ளி, 5 ஜனவரி, 2018

உங்கள் தயாரிப்புகளை பிரபலப்படுத்தும் video-வை தயாரிப்பது எப்படி?

நீங்கள் ஒரு புதிய பொருளை தயாரிப்பவரா? மக்கள் தேவை, வசதிக்கேற்ப மாற்றம் செய்யப்பட்ட தயாரிப்புகளை விற்பவர்களா? அல்லது ஏற்கனவே சந்தையில் உள்ள பொருட்களையே மலிவான விலையில் தயாரித்து விற்பவரா? உங்கள் தொழில் வெற்றிபெற வாழ்த்துக்கள். உங்களை போன்ற  தொழில் முனைவோர்களுக்கு உள்ள பொதுவான சவால், உங்கள் தயாரிப்பு அல்லது சேவையின் புதுமை மற்றும் தனித்துவமான அனுபவங்களை நுகர்வோர்களிடம் கொண்டு சேர்ப்பது. இதை சமாளிக்க சிறந்த உத்தி, காணொளி சந்தைப்படுத்தல் (Video Marketing).
Video Marketing

ஏன் video தேவை?

 • ஒரு தயாரிப்பை எளிமையாகவும் தெளிவாகவும் விளக்க கூடியது.
 • குறைந்த செலவில் நிறைவான வருமானத்தை  பெற்றுத் தரக்கூடியது .
 • நுகர்வோர்களுக்கு நம்பகமானது.
 • அதிகம் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவது.
இந்த அடிப்படையானா அனுகூலங்களுடன், உங்கள் video-வில் பகிரப்படும் தகவல்களை பொறுத்து கூடுதல் பலன்களை பெறலாம்.

என்ன video பகிரலாம்:

பொதுவாக வணிக நிறுவனங்கள் பின்வருவனவற்றில் ஏதாவது ஒருவகை வீடியோவை பகிர்வர்.
 • தங்கள் தயாரிப்பு அல்லது சேவையின் செயல் விளக்கம் - Demo Video
 • தங்கள் தயாரிப்பை பற்றிய நுகர்வோரின் சந்தேகங்களும் அதற்க்கான விளக்கங்களும் - Q&A video
 • வாடிக்கையாளர் விமர்சனங்கள் - customer review
 • தயாரிப்பின் திறப்பு மற்றும் பயன்படுத்தும் முறை - Unboxing and Hands-on review
இத்துடன் உங்கள் தயாரிப்பின் பிரத்தியேக தேவைக்கேற்ப video-க்களை தயாரித்து வெளியிடலாம்.

Video-க்கள் நுகர்வோர்களிடம் சென்றடைவது எப்படி?

நீங்க தயாரித்த video-வை சமூக வலைத்தளங்கள் மூலமாக நுகர்வோர்களிடம் கொண்டு சேர்க்கலாம். உதாரணமாக, உங்கள் Facebook timeline-ல் share செய்யலாம், உங்கள் நிறுவனத்தின் Facebook பக்கத்தில் பதிவிடலாம், Facebook Group-களில் பகிரலாம், Whatsapp-ல் பகிரலாம், Youtube மூலமாக அணைத்து தளங்களிலும் embed செய்யலாம். அதுவும் கட்டணம் ஏதும் இல்லாமல்.

Jayaraj
சென்னையை சேர்ந்த திரு.ஜெயராஜ், இந்த முறையில் வெற்றிகரமாக தனது புதிய தயாரிப்பை பிரபலப்படுத்தி வருகிறார். தினமும் இருட்டிய உடன் தானாகவே எரியும் வகையில் LED பல்புகளை தயாரித்து Smart Lite என்ற பெயரில் விற்பனை செய்து வருகிறார். இவர் தனது bulb எப்படி வேலை செய்கிறது, அதன் சிறப்பம்சங்கள் என்ன போன்றவற்றை ஒரு எளிய செயல்விளக்க (demo) வீடியோவை வெளியிட்டார். இதனை தனது Smart Lite Facebook பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். இவரது டெமோ விடியோவை பார்த்து ஒரு சில நுகர்வோர்களும் மொத்த வியாபாரிகளும் தொடர்பு கொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து நுகர்வோர்களுக்கு உள்ள ஐயங்களை விளக்கி, அதையும் Q&A video-வாக பதிவிட்டுள்ளார். இவரின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்குவோம்.

இதை போல உங்கள் நிறுவனத்தின் தயாரிப்பையும் video marketing செய்ய வேண்டுமா? அப்போது நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில  விஷயங்கள் என்னென்ன? அந்த video-வை குறைத்த செலவில் நீங்களே எப்படி தயாரிப்பது? இந்த video அதிகமாக பகிரப்பட்டு மேலும் பல நுகர்வோரை சென்றடைவது எப்படி? இவற்றை அறிய எனது அடுத்த பதிவை படியுங்கள்.

உங்கள் கருத்துக்கள் / விமர்சனங்கள் / பரிந்துரைகளை கீழே உள்ள comment box-இல் பகிருங்கள்