திங்கள், 17 ஜூலை, 2017

Facebook-ல் கட்டண விளம்பரம் செய்வது எப்படி? - தொடர்ச்சி

Facebook விளம்பரத்தை வடிவமைப்பது எப்படி என்று அறிந்து கொள்வோம். முதலில் Advert name, அதாவது விளம்பரத்தின் பெயரை உள்ளிடவும். அடுத்து விளம்பரத்தின் படங்களை தேர்வு செய்ய வேண்டும். Facebook நமக்கு 3 வகையான படங்களை உபயோகிக்க வசதியளிக்கிறது.

Single image: ஒற்றை புகைப்படத்தை பயன்படுத்தலாம். அந்த புகைப்படம் நாம் ஏற்கனவே இந்த page-ல் பதிவிட்டுள்ள புகைப்படமாக இருக்கலாம் அல்லது புதிதாகவும் upload செய்யலாம். இதற்கு மாற்றாக
ஏற்கனவே ஆயத்தமாக கொடுக்கப்பட்டுள்ள free stock images-களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு நாம் 6 புகைப்படங்கள் வரை தேர்ந்தெடுத்து பயன்படுத்த முடியும். அதாவது ஒவ்வொரு முறை விளம்பரம் காட்டும் பொழுதும் 6-ல் ஏதாவது ஒரு புகைப்படம் காண்பிக்கப்படும்.

Single video: ஒற்றை காணொளியை நீங்கள் பதிவேற்றலாம். இங்கும் நீங்கள் video-வை upload செய்ய அல்லது ஏற்கனவே பதிவிட்டுள்ள காணொளியை பயன்பதுத்த வசதியளிக்கப் பட்டுள்ளது. அடுத்து உங்கள் காணொளியின் thumbnail எனப்படும் முன்னோட்ட காட்சியை தேர்ந்தெடுக்கவும். இதற்க்கு உங்கள் காணொளியின் ஒரு காட்சியை தேர்ந்தெடுக்கலாம் அல்லது நீங்களே ஒரு புகைப்படத்தை பதிவேற்றலாம். உங்கள் விளம்பரத்தை காணும் பயனர்கள் முதலில் thumbnail படத்தையே காண்பர். அதன் பின்னரே play பொத்தானை அழுத்தி காணொளியை காண இயலும். ஆகையால் நீங்கள் தேர்ந்துக்கும் thumbnail காட்சி பயனரின் ஆர்வத்தை தூண்டும் விதமாக அமைவது அவசியம்.

Slideshow: நீங்கள் 3 முதல் 10 புகைப்படம், காணொளி அல்லது இரண்டையும் கலந்து ஒரே காணொளியாக இணைத்து பயன்படுத்த Facebook வசதியளிக்கிறது. இதற்கு பின்னணி இசையையும் சேர்த்துக் கொள்ளலாம். இதையே slideshow என்று அழைக்கின்றனர். slideshow-ஐ உருவாக்கிய பின் ஏற்கனவே குறிப்பிட்டவாறு thumbnail-லையும் தேர்ந்தேடுக்கவும்.

படங்கள் மற்றும் காணொளிகளை பதிவேற்றும் பொழுது Facebook பரிந்துரைக்கும் அளவீடுகளை கருத்தில் கொண்டு செயல்பட்டால் சிறந்த பலன்களை பெறலாம்.

How_to_do_paid_advertising_on_Facebook_contd_banner
Designed by Freepik
நிறைவாக, நீங்கள் விளம்பரப்படுத்த வேண்டிய பக்கம் மற்றும் அதை பற்றிய குறுவிளக்கம் ஆகியவற்றை உள்ளிடவேண்டும். உங்கள் பக்கத்தை பற்றிய விளக்கம் இரத்தின சுருக்கமாகவும் அதே சமயம் உங்கள் சாத்திய வாடிக்கையாளர்களை கவருமாறும் அமையவேண்டும். உங்கள் விளம்பரம் வாடிக்கையாளர் பார்வையில் எவ்வாறு இருக்கும் என்பதை இடது பக்கத்திலுள்ள preview பலகத்தில் காணலாம்.நீங்கள் ஒவ்வொரு முறை உங்கள் உள்ளீடுகளை மாற்றியமைக்கும் போதும், உங்கள் விளம்பர முன்னோட்டத்தில் அதன் மாற்றங்களை உடனடியாக கண்டுணரலாம்.

அனைத்து உள்ளீடுகளையும் ஒரு முறை சரி பார்த்த பின்னர் Place order பொத்தானை அழுத்தவும். இப்பொழுது உங்கள் விளம்பரம் "pending review" நிலையில் இருக்கும். Facebook உங்கள் விளம்பரத்தை ஆய்வு செய்த பின்னர் காட்சிப்படுத்தப் படும்.

உங்கள் விளம்பரத்திற்கு உரிய கட்டணத்தை செலுத்த வலது பலகத்தில் மேல் மூலையில் உள்ள "advert manager" எனும் தலைப்பை சொடுக்கி "Billing & payment methods" எனும் விருப்பை தேர்வு செய்யவும். பின்னர் 

"Edit payment methods"-ஐ சொடுக்கி பின்வரும் திரையில் "add money" பொத்தானை அழுத்தவும். நீங்கள் credit / debit card, netbanking அல்லது PayTM wallet-ஐ பயன்படுத்தி கட்டணம் செலுத்தலாம். உங்கள் விளம்பரத்தின் பயன்பாட்டுக்கேற்ப கட்டணம், முன்பணத்திலிருந்து கழித்துக் கொள்ளப்படும்.

Facebook கட்டண விளம்பரம் மூலம் சிறந்த பலன்களை பெற 6 ரகசியங்கள் என்ன? இதற்க்கான விடையை  தெரிந்து கொள்ள எனது அடுத்த post-ஐ படியுங்கள்!

என்னை தொடர்பு கொள்ள - Contact me
உங்கள் கருத்துக்கள் / விமர்சனங்கள் / பரிந்துரைகளை கீழே உள்ள comment box-இல் பகிருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக