புதன், 12 ஜூலை, 2017

Facebook-ல் கட்டண விளம்பரம் செய்வது எப்படி?

இதுவரை நீங்கள் உங்கள் நண்பர்கள், துறை சார்ந்த குழுக்கள், உங்கள் வாடிக்கையாளர்கள், அவர்கள் சார்ந்த குழுக்கள் என அனைவருக்கும் உங்கள் Facebook பக்கத்தை பற்றி தெரியப் படுத்தியுள்ளீர்கள். நீங்கள் பதிவிடும் சுவாரசியமான பதிவுகளை இவர்களுடன் தொடர்ந்து பகிர்வதன் மூலமும் அவர்களை உங்கள்வசம் ஈர்க்க முயற்சிக்கலாம்.

தொடர்ந்து இப்பயிற்சியை திரும்பத்திரும்ப செய்வதன் மூலம் இயற்கையான நேயர்களை (organic customers) நீங்கள் பெறலாம். நமது சாத்திய வாடிக்கையாளர்களின் தோராயமான எண்ணிக்கையை மனதில் கொண்டு, அதில் 2% பயனர்களை நமது நேயர்களாக பெறுவதை, நமது இலக்காக வைத்துக்கொள்ளலாம். ஆனால் அதற்காக செலவழியும் நேரம் மற்றும் நம் போட்டியாளர்களின் நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு, நமது இலக்கை விரைவாக சென்றடைய அவசியம் ஏற்படலாம். அதற்க்கான தீர்வையும் Facebook-எ வழங்குகிறது.

How_to_do_paid_advertising_on_Facebook_banner
Designed by Freepik

நீங்கள் உங்கள் கட்டண விளம்பரத்தை Facebookல் பிரசுரிப்பது எப்படி?

Facebook பல வகையான விளம்பர குறிக்கோள்களை (objective) அளிக்கிறது. தொடக்க நிலையில் நாம் நமது பக்க நேயர்களை (likes) அதிகரிக்கும் குறிக்கோளை மட்டும் காண்போம். முதலில், மேல் பலகத்தில் உள்ள தலைகீழ் முக்கோண பொத்தானை சொடுக்கி, அந்த பட்டியலில் Create advert என்ற விருப்பை தேர்வு செய்யவும். உங்கள் விளம்பரத்தை பிரசுரிப்பதில் 3 படிகள் உள்ளன.
 1. Campaign: Campaign என்பதே உங்கள் விளம்பரத்தின் உயரிய நிலை. இதில் Reach குறிக்கோளை தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் campaign-க்கு தகுந்த பெயரை உள்ளீடு செய்யவும்.
 2. Advert set: அடுத்த நிலையில் Advert set-ஐ தேர்ந்தெடுக்கவும். Advert set-இன் பெயரை உள்ளிட்டு, விளம்பரம் செய்ய வேண்டிய பக்கத்தை தேர்ந்தெடுக்கவும். Audience பகுதியில், location textbox-ல் உங்கள் சாத்திய நேயர்கள் இருக்கும் பகுதியை உள்ளிடவும். அல்லது drop pin பொத்தானை அழுத்தி map-ல் ஒரு புள்ளியை தேர்ந்தெடுக்கலாம். இயல்பாக உங்கள் pin-ஐ சுற்றி 16 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ளவர்கள் தேர்ந்தெடுக்க பட்டிருப்பர். உங்கள் தேவைக்கேற்ப சுற்றளவை மாற்றியமைத்துக் கொள்ளலாம். 

  நீங்கள் location-ஐ தேர்ந்தெடுத்த பின்னர், வலது பலகத்தில் உள்ள Audience size பகுதியில் உங்கள் விளம்பரம் சென்றடையாக் கூடிய பயனர்களின் மதிப்பீட்டு எண்ணிக்கையை அறியலாம்.அதன்பின் ஒவ்வொரு முறை நீங்கள் உள்ளீடுகளை மாற்றியமைக்கும் போதும் இந்த மதிப்பீடு தானாகவே மாறுவதை கவனிக்கலாம்.

 3. அதன் பின்னர் உங்கள் சாத்திய நேயர்களின் வயது, பாலினம், மொழி ஆகியவற்றை உள்ளிடுங்கள். பின்னர் Detailed targeting-ல் உங்கள் சாத்திய நேயர்களின் விருப்பங்கள், குணாதிசயங்கள், உறவு நிலை (relationship status), கல்வி உள்ளிட்ட பல்வேறு தகவல்களை உள்ளிடலாம். இது மட்டுமன்றி உங்கள் சத்திய நேயர்கள் ஆக தகுதியற்றவர்கள் குணங்களையும் உள்ளீடு செய்து  அவர்களை விளம்பரம் சென்றடையாமல் தவிர்க்கலாம்.

  ஆரம்ப கட்டத்தில் நாம் சில அதிநவீன வசதிகளை சேர்த்துக் கொள்ளவேண்டிய அவசியமில்லை. Facebook advertising-ல் நீங்கள் கைதேர்ந்த பின்னர் உங்களது அடுத்தடுத்த விளம்பரங்களில் அவற்றை தேவைக்கேற்ப்ப பரீட்சித்துப் பார்க்கலாம்.

  அடுத்து Budget-ல் உங்கள் தினசரி அல்லது மொத்த விளம்பரத்திற்க்கான வரம்பை பதிவு செய்துக் கொள்ளலாம். Schedule-ல் உங்கள் விளம்பரத்தின் ஆரம்ப மற்றும் நிறைவு தேதிகளை பதிவு செய்து கொள்ளலாம். இவற்றை பதியாவிட்டால் நமது கணக்கில் இருக்கும் தொகைக்கேற்ப விளம்பரம் செய்யப்படும்.

  நிறைவாக, உங்கள் விளம்பரத்தை வடிவமைக்க வேண்டும். அதை பற்றி எனது அடுத்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

என்னை தொடர்பு கொள்ள - Contact me
  உங்கள் கருத்துக்கள் / விமர்சனங்கள் / பரிந்துரைகளை கீழே உள்ள comment box-இல் பகிருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக