ஞாயிறு, 30 ஜூலை, 2017

உங்கள் Facebook Ad சிறப்பாக செயல்படுகிறதா என்பதை கண்காணிப்பது எப்படி?

இப்பொழுது உங்கள் முதல் Facebook கட்டண விளம்பரத்தை தொடங்கி விட்டீர்கள். முதல் விளம்பரத்தை சிறிய தொகையுடன் தொடங்கவும். அதற்கு கிடைக்கும் வரவேற்பை கருத்தில்கொண்டு தொடரலாம் அல்லது விளம்பர அமைப்புகளை சற்று மாற்றி அமைத்து செயல்திறனை மேம்படுத்தலாம். உங்கள் கட்டண விளம்பரத்தை மேம்படுத்தி சிறந்த பலன்களை வழங்குவதில் Facebook குழுவினர் வல்லவர்கள். ஆகையால் கவலை மறந்து Facebook தரும் குறிப்புகளை புரிந்து செயல்பட்டால் சிறந்த பலன்களை பெறலாம்.

துவக்க நிலையில், நாம் சில அடிப்படை அளவீடுகளை கண்காணித்தல் போதுமானது. அவ்வாறு நாம் கண்காணிக்க வேண்டியவை என்னென்ன, அவற்றை எவ்வாறு பொருள் கொள்ளவேண்டும் என்பதை காண்போம். Advert Manager பகுதியை பயன்படுத்தி நீங்கள் எளிமையாக உங்கள் விளம்பரத்தின் செயல்திறனை கண்காணிக்கலாம்.

How_to_monitor_if_your_Facebook_ad_is_performing
Designed by katemangostar / Freepik
முதலில் www.facebook.com/ads/manager என்ற உரலியை சொடுக்கவும். அடுத்து நீங்கள் காண விரும்பும் காலவரையை தேர்ந்தெடுக்க வேண்டும். வலதுபுற மேல் மூலையில், Create advert பொத்தானுக்கு கிழ் உள்ள Dropdown-ஐ சொடுக்கவும் (படம் 1 காண்க). உங்கள் விளம்பரத்தின் செயல்திறனில் போக்கை அளவிட வார காலவரை (this week) சிறந்தது.

How_to_monitor_if_your_Facebook_ad_is_performing_fig1
படம் 1
Account Overview பக்கத்தில் உங்கள் விளம்பரத்தை பார்த்தவர்கள் எண்ணிக்கை(Reach), செலவழித்த தொகை(Amount spent), பதிவுகள்(Impressions), இணைப்பு சொடுக்குகள்(Link clicks) ஆகியவற்றை நாள் வாரியாக ஒப்பிட்டு அதன் போக்கை அறியலாம். மேலும் பாலினம், வயது, மணி வாரியாக விளைவுகளை(results) பகுத்தறியலாம்.

இரண்டாவதாக உள்ள Campaigns பக்கத்தில் உங்கள் campaign-வாரியான பலன்களை அறியலாம். Delivery நெடுவரிசையில்(column) உங்கள் campaign-ன் நிலையை அறியலாம். active எனில் campaign பயன்பாட்டில் உள்ளது. Not delivering, inactive எனில் செயல்பாட்டில் இல்லை என்று அர்த்தம். எத்தனை முறை உங்கள் campaign அதன் குறிக்கோளை அடைந்துள்ளது என்பதை Results நெடுவரிசையில் அறிந்து கொள்ளலாம். Cost per result-ல் உங்கள் மொத்த செலவு தொகையை நீங்கள் பெற்ற like-களின் (இந்த campaign-ன் குறிக்கோள்) எண்ணிக்கையால் வகுத்து அதன் சதவிகிதத்தை குறிப்பிடுவர். Amount spent என்பது நீங்கள் செலவிட்ட மொத்த தொகை, Ends-உங்கள் campaign-ன் நிறைவு தினம்.

மூன்றாவதாக உள்ள Advert Sets பகுதியிலும் இதே நெடுவரிசைகள் கொடுக்க பட்டுள்ளன. ஒவ்வொரு campaign-னுக்குள் இருக்கும் பல்வேறு advert set வாரியாக அதே அளவீடுகளை காணலாம். நீங்கள் குறிப்பிட்ட சில campaign-களின் செயல்திறனை மட்டும் காண விரும்பினால், campaign பகுதியில் அந்த campaign-க்ளைம் மட்டும் தேர்ந்தெடுத்து பின்னர் advert sets பகுதிக்கு வந்து காணலாம். அவ்வாறு செய்யும் பொழுது நீங்கள் தேர்ந்தெடுத்த campaign-ன் advert set-கள் மட்டுமே காட்டப்படும்.

நான்காவதாக, adverts பகுதியில் மேற்குறிப்பிட்ட நெடுவரிசைகளுடன் Relevance என்ற நெடுவரிசையும் கூடுதலாக கொடுக்க பட்டிருக்கும். உங்கள் விளம்பரத்தை பார்வையாளர்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதற்க்கேற்ப 1 முதல் 10 வரை ஒரு மதிப்பீடு வழங்கப்படும். இந்த மதிப்பீடு உங்கள் விளம்பரம் 500 பதிவுகளை தாண்டிய பின்னரே வழங்கப் படும். உங்கள் relevance எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவு வரவேற்பை பெற்றிருக்கிறது என்று கொள்ளலாம்.

இப்பொழுது நீங்கள் கண்காணிக்க வேண்டியவை என்னென்ன என்பதை காண்போம்.

  • Cost per result எவ்வளவு என்பதை கண்காணிக்க வேண்டும். உங்கள் வியாபாரத்தில் சராசரியாக ஒவ்வொரு வாடிக்கையாளரிடமிருந்து எவ்வளவு லாபமீட்டுகிறீர்கள் என்பதை பொறுத்து அந்த கட்டணம் கட்டுப்படியாகுமா என்பதை சரிபார்த்துக் கொள்ளுக்குங்கள். Cost per result அதிகமாக இருப்பின் அந்த campaign-க்கு உட்பட்ட எந்த advert set அல்லது advert சரியான பலன் தரவில்லை என்பதை கண்டறிந்து அதனை நிறுத்தி வைக்கலாம் அல்லது மாற்றி அமைப்பது குறித்து ஆலோசிக்கலாம்.
  • Relevance மதிப்பெண் குறைவாக இருப்பின் அந்த advert-ஐ மட்டும் நிறுத்தி வைக்கவோ அல்லது மாற்றி அமைக்கவோ ஆலோசிக்கலாம்.
  • Campaign-க்கு உள்ளே இருக்கும் தலைப்பு பட்டையில் உங்கள் plus குறியீடு உள்ள பொத்தானை அழுத்தி CTR(all) என்ற நெடுவரிசையையும் சேர்த்துக்கொள்ளுங்கள். Click through rate என்பதே அதன் விரிவாக்கம் ஆகும். உங்கள் விளம்பரத்தின் பதிவுகள் மற்றும் அதை சொடுக்கியவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் விகிதாச்சாரமே இந்த CTR ஆகும். ஒரு குறிப்பிட்ட campaign-ல் இந்த விகிதம் குறைவாக இருப்பின், அதன் கீழுள்ள advert set மற்றும் advert-களின் CTR-களை ஆராய வேண்டும். அதில் ஒப்பீட்டளவில் குறைவான CTR கொண்ட advert set அல்லது advert-ஐ நிறுத்துவது அல்லது மாற்றியமைப்பதன் மூலம் உங்கள் விளம்பரத்தின் செயல்திறனை மேம்படுத்தலாம்.

இந்த அடிப்படை தகவல்களை கொண்டு ஓரிரு விளம்பரங்கள் செய்த பின்னர், facebook வழங்கும் மற்ற மேம்படுத்தப்பட்ட வசதிகளையும் முயற்சித்து பார்க்கலாம். வாழ்த்துக்கள்!!!
என்னை தொடர்பு கொள்ள - Contact me உங்கள் கருத்துக்கள் / விமர்சனங்கள் / பரிந்துரைகளை கீழே உள்ள comment box-இல் பகிருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக