சனி, 8 ஜூலை, 2017

Facebook-ஐ பயன்படுத்தி உங்கள் வாடிக்கையாளர்களை சென்றடைவது எப்படி?

இணையத்தில் உங்கள் வணிகத்தை இலவசமாக விளம்பரப் படுத்த சிறந்த வழி, Facebook page உருவாக்குவது.

Facebook-இல் விளம்பரப்படுத்துவதில் முதல் படி Facebook Page உருவாக்குதல். Facebook Page என்பது Facebook profile-லிருந்து சற்றே மாறுபட்டது. உங்கள் நிறுவனத்துக்கான page தொடங்குவதன் மூலம் post, photo, video-க்கலை பகிர்வதோடு contest நடத்தலாம், offer-களை பகிரலாம். Facebook page-ன் மூலமே Facebook-ல் கட்டண விளம்பரங்களை பிரசுரிக்க முடியும்.

Facebook page-ஐ உருவாக்குவது எப்படி?

  • முதலில் facebook.com தளத்தை திறந்து உங்கள் username மற்றும் password-ஐ பயன்படுத்தி login செய்யவும்.
  • பின்னர் இடது பலகத்தில் Create-எனும் தலைப்பின் கீழ் page என்ற link-ஐ சொடுக்கவும் (click செய்யவும்).
  • அடுத்த திரையில் நீங்கள் உள்ளூர் வணிகரா, நிறுவனமா, வியாபாரியா  என்பதற்கேற்ப தகுந்த விருப்பை தேர்ந்தெடுக்கவும்.
  • அடுத்து உங்கள் பக்கத்தின் பெயரை பதிவு செய்யவும்.
  • உங்கள் பக்கம் உருவாக்க பட்டுவிட்டது. உங்கள் நிறுவனம் / வர்த்தகத்தின் முத்திரை மற்றும் வாடிக்கையாளர்கள் எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய புகைப்படம் போன்றவற்றை முறையே profile மற்றும் cover புகைப்படமாக பொருத்தலாம்.
  • உங்கள் வணிகத்தை பற்றிய அறிமுகம் மற்றும் விளக்கம், முகவரி, இடம், தொடர்பு எண், வணிக நேரம் போன்ற தகவலையும் பகிரலாம். உங்கள் வணிகத்துக்கு பொருத்தமற்றவற்றை அல்லது பொதுமக்களுக்கு பகிரவிரும்பாதவற்றை தவிர்த்து விடலாம்.
இப்போது உங்கள் Facebook page தயாராகி விட்டது. 

How to reach your customers through Facebook - Banner
Designed by Freepik

எப்போது page-ல் post செய்ய வேண்டும்?

Page-ஐ உருவாக்கியவுடன் உங்கள் வணிகத்தின் அறிமுகத்தை பத்தியாகவோ, புகைப்படமாகவோ அல்லது காணொளியாகவோ பதிவிடலாம். 

உங்கள் பொருள் / சேவையை வாடிக்கையாளர் பயன்படுத்தும் கால இடைவெளி மற்றும் நீங்கள் உள்ளடக்கத்தை (content) உருவாக்க தேவையான இடைவெளி போன்றவற்றை கருத்தில் கொண்டு, நீங்கள் பதிவிடப்போகும் இடைவெளியை தேர்ந்தெடுக்கவும். பின்னர் அந்த இடைவெளிக்கு மிகாமல் தொடர்ந்து பதிவிடுங்கள். இவ்வாறு செய்வதால் உங்கள் வாடிக்கையாளர்கள் நினைவில் நீங்கள் தொடர்ந்து இடம்பெற வழிவகுக்கும்.

ஒருவேளை பொருளடக்கத்தை உருவாக்க அதிகப்படியான நேரம் தேவைப்படுமாயின், இடைச்செருகலாக உங்கள் வணிகம் சம்பந்தமான பிற சுவாரசிய தகவல்கள் அல்லது புகைப்படம் / காணொளிகளை பதிவிட்டு வரலாம். இது உங்கள் வாடிக்கையாளர்களின் ஈடுபாடு குறையாமல் இருக்க உதவும்.

எவ்வகை Facebook பதிவுகள் உங்கள் வாடிக்கையாளர்களை கவரும்? தெரிந்து கொள்ள எனது அடுத்த post-ஐ படியுங்கள்!

என்னை தொடர்பு கொள்ள - Contact me
உங்கள் கருத்துக்கள் / விமர்சனங்கள் / பரிந்துரைகளை கீழே உள்ள comment box-இல் பகிருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக