ஞாயிறு, 9 ஜூலை, 2017

எவ்வகை Facebook பதிவுகள் உங்கள் வாடிக்கையாளர்களை கவரும்?

உங்கள் வணிகம் என்ன, என்ன உள்ளடக்கத்தை பதிவிடப் போகிறீர்கள், உங்கள் சாத்தியமான வாடிக்கையாளர் யார் என்பதற்கேற்ப்ப உங்கள் பதிவுகள் அமைய வேண்டும். பொதுவாக நிஜ உலகில் உங்கள் வாடிக்கையாளர்களை எது கவர்கிறது என்பதை அறிந்து இணைய உலக பதிவுகளை தேர்ந்தெடுப்பது சாலச் சிறந்தது.

Which kind of posts attracts customers -banner
Designed by Freepik

பொதுவாக, காணொளி பதிவுகள் (video) பெருவாரியான மக்களை கவரும். உங்கள் வணிகத்தின் அறிமுகம், நோக்கம் போன்றவற்றை விளக்கும் காணொளி, செயல்விளக்க காணொளி, உங்கள் வணிக நிகழ்வுகளின் காணொளி போன்றவற்றை பதிவிடலாம்.

காணொளி உருவாக்கும் போது அல்லது தொகுக்கும் பொது கவனத்தில் கொள்ள வேண்டியது, சராசரியாக ஒவ்வொரு காணொளியும் 5-6 வினாடிகள் மட்டுமே பார்க்கப்படுகிறது. 6 வினாடிக்குள் தங்களை கவரும் காணொளியை மட்டுமே பயனர்கள் தொடர்ந்து பார்க்கின்றனர். ஆகவே 6 வினாடிக்குள் காணொளியின் உள்ளடக்கத்தை பயனர் உணரச்செய்ய வேண்டும். பொதுவாக 60 முதல் 90 வினாடிக்குள் இருக்கு காணொளிகள் நீங்கள் எதிர்பார்த்த பலனை கொடுக்கும். தேவைப்படின், காணொளியை பாகங்களாக பகுத்து தொடராக வெளியிடலாம்.

உங்கள் வணிகம் கல்வி, இலக்கியம், செய்திகள் தொடர்பாக இருப்பின், நீங்கள் பத்திகளாக(text) பதிவிடலாம். காணொளியை போலவே இதிலும், நெடிய பத்திகளில் பயனர்கள் கவனம் இழக்க அதிக வாய்ப்புள்ளது. ஆகவே சிறிய பத்திகளாக பதிவிடலாம். நெடிய பத்திகளை பகுதிகளாக பிரித்து வெளியிடலாம். மிகவும் சுவாரசியமான உள்ளடக்கமாக இருப்பின் இந்த வரையறை ஏதும் தேவையில்லை.

உங்கள் வணிகம் பொருள் விற்பனை, புகைப்படம், உணவகம் தொடர்பானதாக இருப்பின் புகைப்படங்களை பதிவிடுவது சிறந்த உத்தியாகும்.

மேற்குறிப்பிட்ட பதிவுகளை தவிர விளம்பர பதிவு, live Video பதிவு, நிகழ்வு (event) பதிவு, சலுகை (offer) பதிவு போன்ற மேலும் பல வசதிகளும் உள்ளன. அவற்றை தேர்ந்தெடுத்து தகுந்த உள்ளீடுகளை அளிப்பதன் மூலம் எளிதில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Facebook page-ன் admin கவனிக்க வேண்டிய விஷயங்கள் யாவை? தெரிந்து கொள்ள எனது அடுத்த post-ஐ படியுங்கள்!

என்னை தொடர்பு கொள்ள - Contact me
உங்கள் கருத்துக்கள் / விமர்சனங்கள் / பரிந்துரைகளை கீழே உள்ள comment box-இல் பகிருங்கள்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக