புதன், 5 ஜூலை, 2017

இணையசந்தை அறிமுகம்

வணக்கம் இணைய நண்பரே!!

இதுவரை நீங்கள் இணையத்தை எதற்காக எல்லாம் பயன்படுத்தியிருக்கிறீர்கள்?
  • Facebook-இல் நண்பர்களுடன் உரையாட?
  • Whatsapp-இல் forward message-களை பகிர்ந்து கொள்ள?
  • உங்களுக்கு தேவையான தகவலை google-இல் தேட?
  • PayTM-இல் recharge செய்ய?
  • Google Map-இல் நீங்கள் சென்றடைய வேண்டிய பாதையை தெரிந்து கொள்ள?
  • அல்லது Bus Ticket, Train Ticket , Movie  Ticket  முன்பதிவு செய்ய?
Inayasandhai banner
Photo created by Freepik
இவ்வாறு நாம் தினம் தினம் நம் அத்தியாவசிய தேவைகளுக்காக இணையத்தை பயன்படுத்தி வருகிறோம். சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின் முடிவில் ஒவ்வொரு இந்தியனும் சராசரியாக 3 மணி நேரம் இணையத்தில் செலவிடுகிறார் என்று தெரிய வந்துள்ளது.

இணையத்தின் பயனர்கள் அதிகரித்து வரும் அதே வேளையில், இணையத்தின் மூலம் நடைபெறும் வணிகமும் அதிகரித்து வருகிறது. Flipkart , Amazon போன்ற இணையதளங்களை பயன்படுத்தாத இணையவாசிகளை காண்பதே மிகவும் அரிது.

இவ்வாறு பல்கி பெருகிவரும் இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களால், இதன் மூலம் நடக்கும் வர்த்தகமும் பெருகி வருகிறது. நிஜ உலகில் உள்ள குறு, சிறு மற்றும் பெரு  வணிக நிறுவனங்கள் அனைத்தும் , இணையம் என்னும் நிழல் உலகிலும் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டியது மிகவும் அத்தியாவசியமாகிறது.

இவ்வாறு இணையம் மூலம் நடத்தப்படும் சந்தைப்படுத்துதலையே Digital Marketing , அதாவது இணைய சந்தை என்று அழைக்கின்றனர். இந்த இணைய சந்தையில் உங்கள் வணிகத்தையும் பங்கேற்க்க வழிகாட்டுவதே இந்த தளத்தின் நோக்கம்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக