வியாழன், 6 ஜூலை, 2017

இணைய சந்தை தளத்தின் குறிக்கோள்!

நீங்கள் உங்கள் ஊரில் மட்டும் வர்த்தகம் செய்யும் சிறு அல்லது குறு வியாபாரியா? உங்கள் சந்தையை விரிவுபடுத்தி உங்கள் வியாபாரத்தை விரிவு படுத்துவதே இந்த வலைப்பூவின் (blog) நோக்கம்.

Online-இல் வர்த்தகம் செய்ய எவ்வளவு செலவாகும்?

நீங்கள் சந்தைபடுத்தும் பொருள் அல்லது சேவை இணையவாசிகளுக்கு சுவாரசியமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் பட்சத்தில் , நீங்கள் குறைவான செலவில் அல்லது இலவசமாகவே கூட விளம்பரப்படுத்த முடியும்.
Digital Marketing in Tamil Objective banner

உதாரணமாக நீங்கள் ஒரு beauty parlour அல்லது முடி திருத்தகம் நடத்திகிறீர்கள் எனில்,  நீங்கள் எவ்வாறு விளம்பரப்படுத்தலாம்? உங்கள் தனித்துவமான hair style-ஐ புகைப்படமாகவோ video-வாகவோ பதிவு செய்து கொள்ளுங்கள். அதை Whatsapp மூலமாகவோ Facebook மூலமாகவோ உங்களை நண்பர்களுக்கு பகிருங்கள். அத்துடன் உங்கள் விவரங்கள், கடை பெயர் , முகவரி, செல்பேசி எண் போன்றவரையும் சேர்த்து பகிருங்கள்.

அந்த hairstyle உங்கள் நண்பர்களை கவர்ந்ததால், அவர்கள் தங்கள் நட்பு வட்டத்துக்கு பகிர்வார்கள். இதன் மூலம் உங்கள் நிறுவனத்தை பற்றிய விவரங்கள் சில நூறு பேருக்கு சென்றடையும். இந்த தகவலுடன் ஒரு குறுகிய கால சலுகையும் சேர்த்து அனுப்புவதன் மூலம் 'சாத்தியமான வாடிக்கையாளரை' (potential  customer) விரைவாக உங்களை வந்தடைய செய்யலாம். இதற்கு நீங்கள் கட்டணம் ஏதும் செலுத்த தேவை இல்லை (இணைய வசதிக்கு செலுத்தும் கட்டணம் தவிர).

சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி சம்பாதிப்பது எப்படி? தெரிந்து கொள்ள எனது அடுத்த post-ஐ படியுங்கள்!

உங்க கருத்துக்கள் / விமர்சனங்கள் / பரிந்துரைகளை கீழே உள்ள comment box-இல் பகிருங்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக