திங்கள், 24 ஜூலை, 2017

Facebook கட்டண விளம்பரம் மூலம் சிறந்த பலன்களை பெற 6 ரகசியங்கள்.

இதுவரை நாம் Facebook page-ஐ உருவாக்குவது எப்படி, அதன் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்ப்பது எப்படி, புதிய வாடிக்கையாளர்களை உருவாக்குவது எப்படி ஆகியவற்றை பார்த்தோம். பின்னர் Facebook ad-ஐ எவ்வாறு உருவாக்கி வெளியிடுவது என்பதை கற்றோம். இப்போது, Facebook கட்டண விளம்பரம் மூலம் சிறந்த பலன்களை பெற 6 அடிப்படை ரகசியங்களை காண்போம்.

How to get best results out of Facebook Ads Tamil
Designed by Freepik

  1. காணொளி விளம்பரம்: புகைப்படங்களை விட காணொளி விளம்பரங்களே (Video ad) பயனர்களின் கவனத்தை அதிகம் கவருகின்றன. தங்கள் Facebook timeline-ல் ஒரு காணொளியின் முற்காட்சியை (preview) பார்த்துவிட்டு play பொத்தானை சொடுக்காமல் கடப்போர் வெகு சொற்பமே. அந்த சொற்பமானோரும் ஒருவேளை அந்த காணொளியை ஏற்கனவே பார்த்துவிட்டதால் கடந்திருக்கலாம். ஆகையால் உங்கள் சாத்திய வாடிக்கையாளர்களை கவரக்கூடிய காணொளியை பயன்படுத்தி விளம்பரம் செய்யலாம். Slideshow வசதியை பயன்படுத்தி 10 நிழற்படங்கள் வரை ஒன்றாக கோர்த்து காணொளியை உருவாக்கியும் விளம்பரப்படுத்தலாம். 

  2. பிரிவு வாரியான விளம்பரம்: ஒவ்வொரு பிரிவினருக்கும் வெவ்வேறு விதமான ரசனை இருக்கும். ஆகையால் உங்கள் சாத்திய வாடிக்கையாளர்கள் யார் என்பதை உணர்ந்து அவர்களின் ரசனைக்கேற்ப தனித்தனி பிரிவுகளாக பகுக்க வேண்டும். உதாரணமாக, 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 15 முதல் 35 வயதுவரையுள்ள இளைஞர்கள், 35 முதல் 55 வயதுள்ள நடுத்தர வயதினர் மற்றும் 55 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் என பகுக்கலாம். ஒவ்வொரு பிரிவினருக்கும் ஏற்றவாறு உங்கள் விளம்பரத்தை யுத்தியை வடிவமைத்தல் நல்ல பலனை தரும்.


  3. உருவாக்கப்படுத்தல்: உங்கள் விளம்பரத்தின் இலக்கு பார்வையாளர்களை (Target Audience) தேர்ந்தெடுக்கும் போது உங்கள் சாத்திய வாடிக்கையாளரின் உருவகப் (persona) படுத்திக்கொள்ள வேண்டும். அவர்களின் பழக்கவழக்கங்கள் என்ன, எந்த சந்தர்ப்பங்களில் உங்கள் நிறுவன சேவையை பயன்படுத்துவர் என்பதை மனதில் கொண்டு உங்கள் advert set-ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். உங்கள் விளம்பரத்தின் படம் மற்றும் அதன் வாக்கியங்கள் உங்கள் உருவாக பயனரை ஈர்க்கும் வகையில் இருக்க வேண்டும். நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பிரிவுகளில் (segment) விளம்பர படுத்த திட்டமிட்டிருக்கிறீர்கள் எனில் ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி உருவாக பயனர்களை உருவாக்கி அவர்களுக்கேற்ற விளம்பரங்களை தனித்தனியாக வடிவமைத்து பயன்படுத்தினால், குறைந்த செலவில் அதிக வாடிக்கையாளர்களை பெற முடியும்.

  4. துடிப்பான வண்ணங்கள்: நீங்கள் புகைப்படம் அல்லது வரைபடத்தை விளம்பரத்துக்கு பயன்படுத்துகிறீர்கள் எனில், அதற்க்கு துடிப்பான (vibrant) வண்ணங்களை தேர்தெடுக்கவும். அது பிண்ணனிக்கு எடுப்பாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் பயனரின் கவனம் நீங்கள் கூற விரும்பும் பொருளில் குவியும். வெள்ளை நிறத்தை பின்னணியாக பயன்படுத்தும் போது அது Facebook timeline-ன் வெண்ணிற பின்னணியுடன் கலந்து ஒரு சிறந்த தோற்றத்தை கொடுக்கும். 

  5. தலைப்பு: உங்கள் விளம்பரத்தில் தலைப்பு இரத்தின சுருக்கமாக இருக்க வேண்டும். அதே சமயம் உங்கள் விளம்பர மூலம் எதிர் நோக்கும் செயலை அறிவுறுத்துமாறு இருக்க வேண்டும். இதனை இணைய வழக்கில் call-to-action என குறிப்பிடுவர். எண்களை கொண்ட தலைப்புகள் அதிக பயனர்களை ஈர்க்கின்றன என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உதாரணமாக, "5% discount ...","Rs.50 OFF..." போன்ற வாக்கியங்களை உங்களை தேவைக்கேற்ப பயன்படுத்தலாம். அதே போல தலைப்பை கேள்வியாக அமைப்பதன் மூலம்மும்  பயனரின் ஆர்வத்தை தூண்டலாம். உதாரணமாக, "சென்னையில் சிறந்த பிரியாணி எங்கு கிடைக்கும் என்று அறிவீர்களா?" என்பது போல உங்கள் தலைப்பை வடிவமைக்கலாம்.

  6. படம்-உரை விகிதம்: உங்கள் புகைப்படம் அல்லது வரைபடத்தில் 20%-திற்கு குறைவான பகுதியை மட்டுமே உரைக்காக (Text) பயன்படுத்த வேண்டும் என Facebook பரிந்துரைக்கிறது. ஆகவே சிறந்த பயனை பெற உங்கள் படத்தில் உங்கள் நிறுவன முத்திரை (logo) மற்றும்  உங்கள் விளம்பர நோக்கம் தவிர வேறெதையும் படத்தின் மேல் குறிப்பிடாமல் தவிர்த்துவிடவும். உங்கள் தகவலை தலைப்பு பகுதியிலேயே குறிப்பிடலாம்.
மேற்குறிப்பிட்ட அனைத்தும் அடிப்படை வரைமுறைகள் மட்டுமே. இதற்கு உட்பட்டு உங்கள் படைப்பாற்றல், தேவை, ஆய்வு முடிவுகள் ஆகியவற்றுக்கேற்ப உங்கள் விளம்பரங்களை வடிவமையுங்கள். வாழ்த்துக்கள்.

என்னை தொடர்பு கொள்ள - Contact me
உங்கள் கருத்துக்கள் / விமர்சனங்கள் / பரிந்துரைகளை கீழே உள்ள comment box-இல் பகிருங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக