திங்கள், 10 ஜூலை, 2017

Facebook page-ன் admin கவனிக்க வேண்டிய விஷயங்கள் யாவை?

இப்போது உங்கள் Facebook page தயாராகி விட்டது. ஒரு சில தகவல்களையும் பதிவு செய்துவிட்டீர்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் நண்பர்களின் நண்பர்கள் வட்டத்தை சேர்ந்த சிலர் உங்கள் page-ஐ like செய்துள்ளனர். இந்த பக்கத்தின் admin-ஆக நீங்கள் அடுத்து செய்ய வேண்டியதென்ன?

Things_to_be_noted_by_faacebook_admin banner
Designed by Freepik

முதற்கட்டமாக, அதிக செலவில்லாமல் உங்கள் பக்கத்தை பிரபலப்படுத்தும் முறைகளை காண்போம். நிஜ உலகில், உங்கள் நிறுவனத்தில் பெயர் பலகை, விளம்பர பலகை, முகப்பு அட்டை (visiting card) போன்று இயன்ற இடங்களில் எல்லாம் பக்கத்தின் விவரத்தை குறிப்பிடலாம். இதனால் உங்கள் பக்கத்தை பற்றி வாடிக்கையாளர்கள் அறிவதுடன், அதன் நம்பகத்தன்மையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இணைய உலகில், உங்கள் துறை சம்பந்தமான group-கள், forum-கள், Facebook உள்ளிட்ட பிற சமூக வலைத்தள பக்கங்களில், உங்கள் Facebook page-ன் உரலியை (link) பதிவிடுங்கள். இத்துடன் சாத்தியமான வாடிக்கையாளர்கள் (potential customers) பங்கேற்க்க கூடிய தளங்களிலும் பதிவிடுங்கள். இது இணைய வெளியில் நிறுவனத்தை பிரசித்தி அடைய செய்யும்.

மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளின் மூலம் 100 like-கலாவது கிடைப்பின் நாம் சரியான திசையில் பயணிக்கிறோம் என கொள்ளலாம். அதற்கு குறைவான like-கள் மட்டுமே பெற்றால், நமது பக்கத்தின் உள்ளடக்கத்தை மாற்றியமைப்பது குறித்து ஆலோசிக்கலாம். 

இப்பொழுது, எந்த பதிவுகளில் வாடிக்கையாளர்கள் ஈடுபாடு காட்டுகிறார்கள் என்பதை நீங்கள் insights பகுதியில் தெரிந்து கொள்ளலாம். கணிசமான வாடிக்கையாளர்கள் ஈடுபாடு காட்டும், அதாவது like, share, comment செய்யும் வகை பதிவுகளை நீங்கள் தொடர்ந்து பதிவிடலாம்.

Facebook-ல் கட்டண விளம்பரம் செய்வது எப்படி? தெரிந்து கொள்ள எனது அடுத்த post-ஐ படியுங்கள்!

என்னை தொடர்பு கொள்ள - Contact me
உங்கள் கருத்துக்கள் / விமர்சனங்கள் / பரிந்துரைகளை கீழே உள்ள comment box-இல் பகிருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக