வெள்ளி, 7 ஜூலை, 2017

சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி சம்பாதிப்பது எப்படி?

சமூக வலைத்தளங்கள் பொழுதுபோக்குக்காக மட்டுமே என்று நினைப்பவரா நீங்கள்? இல்லை. சமூக வலைத்தளங்களை சரியாக கையாண்டால் அதன் மூலம் பணம் சம்பாதிக்கவும் முடியும்.

நிஜ உலகில் வர்த்தகம் செய்து வரும் சிறு / குறு தொழில் முனைவோரா நீங்கள் ? ஆம் எனில் நீங்கள் உங்கள் வியாபாரத்தை சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருமானத்தை பெருக்கலாம்.

சமூக வலைத்தளம் மூலம் நேரடியாக வியாபாரம் செய்ய முடியுமா?

முடியும். ஆனால் அவ்வாறு முயன்றவர்களால் பெரிதாக வருமானம் ஈட்ட முடியவில்லை என்பதே நிதர்சனம். மாறாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வாடிக்கையாளர்களை ஈர்க்கலாம், ஈடுபடுத்தலாம். இதனை சந்தை மொழியில் customer Engagement என்று அழைக்கின்றனர்.
Social media for small business banner
Designed by Freepik

உதாரணமாக, நீங்கள் ஒரு சிறிய உணவகமோ அல்லது சாலையோர உணவகமோ நடத்துகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். நீங்கள் உங்கள் வாடிக்கையாளரை தக்க வைத்துக்கொள்ள என்ன செய்வீர்கள்? 
 • உங்கள் உணவில் சிறப்பை விளக்குதல் .
 • உங்கள் கடையின் தனித்துவத்தை எடுத்துக்கூறுதல் .
 • உங்கள் அல்லது உங்கள் சமையல்காரரின் சமையல் அனுபவம் மற்றும் திறமையை எடுத்துக்கூறுதல்.
 • சமையல் முறையை வாடிக்கையாளர் காண அனுமதித்தல்.
 • உணவு பண்டங்களின் பாரம்பரியம் அல்லது ஊட்டச்சத்துக்களை விளக்குதல்.
 • பிற வாடிக்கையாளர்களின் பாராட்டுகளை குறிப்பிடுதல்.
இதை நிஜ உலகில் செய்யும் பொழுது உங்கள் கருத்து 5-6 பேருக்கு மட்டுமே சென்றடையும். இதையே நீங்கள் சமூக வலைத்தளம் மூலம் பகிரும்போது அது சில ஆயிரக்கணக்கானோரை சென்றடைய வாய்ப்புள்ளது.

மேற்குறிப்பிட்ட செயல்களை சமூக வலைத்தளம் மூலம் எவ்வாறு செய்யலாம்?

 • உங்கள் உணவின் சிறப்பை விளக்கும் பத்தி, photo அல்லது video-வை பதிவிடலாம்.
 • உங்கள் கடையின் சிறப்பை விளக்கும் பத்தி, photo அல்லது video-வை பதிவிடலாம்.
 • உங்கள் அல்லது உங்கள் சமையல்காரரின் சமையல் அனுபவத்தை விளக்கும் பத்தி, photo அல்லது video-வை பதிவிடலாம்.
 • உங்கள் சமையல் முறையை video-வாக பதிவிடலாம்.
 • உணவு பண்டங்களின் பாரம்பரியம் அல்லது ஊட்டச்சத்துக்களை விளக்கும் பத்தி, photo அல்லது video-வை பதிவிடலாம்.
 • பிற வாடிக்கையாளர்களின் review மற்றும் rating-கை பதிவிடலாம்.

இவற்றை செய்வதன் மூலம் எவ்வளவு வருமானம் ஈட்டமுடியும்?

எதிர்வரும் காலத்தில் தொலைக்காட்சிக்கு மாற்றாக இணையம் வளரும் என்று நிபுணர்களால் சொல்லப் படுகிறது. அது உண்மையாகுமெனில் மேற்குறிப்பிட்டவற்றை செய்வதன் மூலம் உங்களை இணையவெளியில் நிலைநிறுத்திக்கொள்ள முடியும். மேலும் நீண்டகால அடிப்படையில் இவை கண்டிப்பாக உங்கள் நிறுவனத்துக்கு பலன் தரும்.


Facebook-ஐ பயன்படுத்தி உங்கள் வாடிக்கையாளர்களை சென்றடைவது எப்படி? தெரிந்து கொள்ள எனது அடுத்த post-ஐ படியுங்கள்!

என்னை தொடர்பு கொள்ள - Contact me

உங்க கருத்துக்கள் / விமர்சனங்கள் / பரிந்துரைகளை கீழே உள்ள comment box-இல் பகிருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக