வெள்ளி, 15 செப்டம்பர், 2017

Online-ல் உங்கள் முதல் அடியை வைக்க உதவும் Google My Business

Online-ல் நுழைய விரும்பும் சிறுதொழில் முதலாளி அல்லது தொழில்முனைவோரா நீங்கள்? இந்த பதிவின் நோக்கம் உங்கள் நிறுவனம் online-ல் முதல் அடியை வைக்க உதவுவதே. ஆரம்ப கட்டத்தில் உங்கள் சாத்திய வாடிக்கையாளர் உங்கள் நிறுவனத்தை பற்றி அறிய வலைத்தளம் ஏதும் நீங்கள் உருவாக்க தேவையில்லை. இலவசமாக உங்கள் கருத்துகளை உங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் சாத்திய வாடிக்கையாளர்களை சென்றடைய உதவுகிறது Google.

உள்ளூரில் வியாபாரம் செய்யும் சிறு வியாபாரிகள் மற்றும் தொழில் முனைவோருக்காக உதவுவதே Google My Business-ன் நோக்கம். Google Maps-ன் அங்கமான Google My Business-ல் உங்கள் நிறுவனத்தை பட்டியலிடுவதன் மூலம், இணையத்தில் உங்களை எளிதில் கண்டறிய இயலும். உங்கள் அருகில் உள்ள வாடிக்கையாளர்கள் உங்கள் பொருட்கள் அல்லது சேவைகள் குறித்து தேடும் பொழுது உங்கள் நிறுவனத்தை அவர்கள் முதன்மையாக காணக்கூடும்.


சரி. உங்கள் நிறுவனத்தை எப்படி Google My Businessல் பட்டியலிடுவது எப்படி?

 1. முதலில் https://business.google.com பக்கத்தை திறக்கவும். உங்கள் Gmail ID-ஐ கொண்டு login செய்யவும்.
 2. பின்னர் வரும் படிவத்தை பூர்த்தி செய்யவும்.
  Google Business form
 3. Submit பொத்தானை click செய்யவும்.
 4. Google Map-ல் உங்கள் நிறுவன இருப்பிடத்தை தேர்ந்தெடுக்க Set marker location பொத்தானை அழுத்தி map-ல் சரியான இடத்தை Click செய்யவும்.
 5. வாடிக்கையாளர் இருப்பிடத்தில் சேவை  வழங்குபவர்களுக்கு மட்டும் பின்வரும் திரை காட்டப்படும். இல்லையேல் நேராக அடுத்த படிக்கு செல்லலாம்.
 6. மேற்குறிப்பிட்டுள்ள திரையில் விவரங்களை பதிவு செய்த பின்னர், அடுத்த திரையின் நீங்கள் இந்த நிறுவனத்தி நிர்வகிக்க அங்கீகரிக்க பட்டவரா என்பதை உறுதி படுத்தவும்.
 7. அடுத்து திரையில் முகவரியை verification செய்ய வேண்டுமெனில் mail பொத்தானை அழுத்தவும்.
 8. 15 நாட்களுக்குள் Google நிறுவனத்திடமிருந்து 5 இலக்க verification code உங்கள் நிறுவன முகவரிக்கு Registered Post மூலம் அனுப்பப்படும். குறிப்பு: உங்கள் நிறுவனத்தின் பெயர் பலகை இருந்தால்தான் தபால்காரர் கடிதத்தை உங்களிடம் வழங்குவார் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
 9. கடிதத்தை பெற்ற பின்னர் http://google.com/verifymybusiness என்ற பக்கத்தை திறந்து உங்கள் Gmail ID-ஐ கொண்டு login செய்யவும்.
 10. Verification Code-ஐ கொடுக்க பட்ட கட்டத்தில் நிரப்பி submit செய்யவும்.
உங்கள் நிறுவனம் இப்போது Google-ல் பட்டியலிடப்பட்டதுஉங்கள் கருத்துகளை மற்றும் தகவல்களை இந்த பக்கத்தின் மூலம் எப்படி பகிர்வது என்பதை எனது அடுத்த பதிவில் காண்போம்.

என்னை தொடர்பு கொள்ள - Contact me
உங்கள் கருத்துக்கள் / விமர்சனங்கள் / பரிந்துரைகளை கீழே உள்ள comment box-இல் பகிருங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக