ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

Youtube-ல் கால்பதிக்க ஓர் வழிகாட்டி


YouTube-ஐ பொதுவாக காணொளி (video) பார்க்க பயன்படுத்தியிருப்பீர்கள். இது வீடியோ பார்க்கும் தளம் மட்டுமே அல்ல, இது ஒரு Facebook, Twitter, Instagram போன்ற சமூக வலைத்தளம் மற்றும் உலகளாவிய ரசிகர்களின் சமூகமாகும். ஒவ்வொரு நிமிடத்திற்கும் 400 மணிநேரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் YouTube-ல் பதிவேற்றப்படுகின்றன என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

இன்றைய தலைப்பு செய்திகளிலிருந்து சினிமா செய்திகள் வரை, கல்வி சார்ந்த காணொளிகள் முதல் சமையல் குறிப்புகள் வரை, சர்வதேச நிகழ்வுகள் முதல் திருமண நிகழ்வுகள் வரை அனைத்தையும் பார்க்க, பகிர உதவும் தளமாக இருக்கிறது Youtube. தொலைக்காட்சி, செய்தித்தாள் போன்ற
பாரம்பரிய ஊடகங்களை போல் அல்லாமல் Youtube ரசிகர்கள் தங்கள் கருத்துகளை பகிர மற்றும் படைப்பாளிகள் தங்கள் சமூகங்களுடன் தொடர்புகொள்ள உதவும் ஒரு சமூக வலைப்பின்னலாக விளங்குகிறது. எனவே உங்கள் எண்ணம்போல் எதை வேண்டுமானாலும் (விதிகளுக்கு உட்பட்டு) Youtube-ல் பகிரலாம்.

உங்கள் உணர்வுகள், கருத்துகள் மற்றும் பேரார்வங்களை இந்த சமூகத்துடன் பகிர்ந்து ஒரு Youtube நட்சத்திரமாக செய்ய வேண்டியது இதுதான்...
 1. உங்களுக்கான ஒரு Youtube Channel-ஐ உருவாக்குங்கள்.
 2. உங்கள் கருத்துகளை விரும்பும் பார்வையாளர்களின் முன் உங்கள் காணொளிகளை நிறுத்துங்கள்.
 3. தொடர்ந்து அவர்கள் உங்கள் காணொளிகளை காண செய்யுங்கள்.
 4. மறவாமல் அவர்களின் கருத்துகளை கேட்டறிந்து உங்கள் மெருகேற்றிக்கொள்ளுங்கள்.
எளிமையாக உள்ளதல்லவா?

தெளிவான முன்திட்டமிடல் இருந்தால் மிகவும் எளிமைதான். ஆனால் இதற்கு முன்னர் உங்களை நீங்கள் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள் சில உள்ளன...
 • உங்கள் channel-ன் குறிக்கோள் என்ன?
 • உங்கள் பார்வையாளர்களாக சாத்தியமுள்ளவர்கள் யார்?
 • உங்களை போலவே குறிக்கோளுடன் இயங்கும் பிற channel-கள் எவை? (அது பிறமொழி Channel-லாகவும் இருக்கலாம்).
 • அந்த channel-களிலிருந்து உங்களை வேறுபடுத்தி காட்டும் தனித்துவ விஷயம் என்ன?
 • 5 ஆண்டு காலத்தில் உங்கள் channel எவ்வாறு இருக்கும்?
இக்கேள்விகளுக்கு தெளிவான விடை கண்ட பிறகு, உங்கள் Channel-லுக்கான திட்டமிடலை தொடங்கலாம். நீங்கள் திட்டமிட வேண்டிய அடிப்படை விஷயங்கள்:
 • உங்கள் காணொளிகளில் (video) பார்வையாளர்களை கவரும் விஷயம் என்ன.
 • உங்கள் காணொளிகள் எந்த சமூகத்தினருக்கானது (community). இங்கு சமூகம் என நான் குறிப்பிடுவது வயது, பாலினம், வேலை, தொழிற்துறை போன்ற காரணிகளால் ஒன்றுபட்ட குழுக்களை.
 • எந்த ஒரு தனிப்பட்ட சமூகத்தின் தனிப்பட்ட தேவைகளுக்கான உள்ளடக்கத்தை (Niche Content) நீங்கள் உருவாக்க உள்ளீர்கள்.
இந்த முக்கிய விஷயங்களுக்கான தெளிவான பதில்கள் இருப்பின், நீங்கள் வெற்றிகரமான ஒரு Youtube Channel-ஐ தொடங்க தயார்!

நீங்களும் ஒரு Youtube படைப்பாளி ஆக தயாராகிவிட்டீர்களா? நீங்கள் எந்த விஷயத்தை பேசும் channel-ஐ உருவாக்க போகிறீர்கள் என்று comment செய்யுங்கள். மேலும் Youtube படைப்பாளி ஆகுவது குறித்து அறிய எனது அடுத்த பதிவை படியுங்கள்.

உங்கள் கருத்துக்கள் / விமர்சனங்கள் / பரிந்துரைகளை கீழே உள்ள comment box-இல் பகிருங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக