சனி, 20 ஏப்ரல், 2019

வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஈடுபாட்டு பதிவுகள் [User Engagment Posts]

நீங்கள் Facebook போன்ற சமூக வலைத்தளங்களில் மூலம் உங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகளை விற்க முனைவோரா? இதை கவனத்தில் கொள்ளுங்கள்.
Facebook பயனர் பெரும்பாலும் எந்த பொருளையும் வாங்கும் நோக்கில் இங்கு வரவில்லை.
பெரும்பான்மையான நேரங்களில் அவர் பொழுதுபோக்கிற்க்காகவோ, நண்பர்களுடன் நேரம் செலவிடுவதற்க்காகவோ அல்லது நண்பர்களின் பதிவுகளை காண்பதற்க்காகவோதான் login செய்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


ஒரு பொருளை வாங்க எண்ணும் பயனர் பொதுவாக Amazon, Flipkart போன்ற ecommerce தளங்களையோ அல்லது அந்நிறுவனத்தின் தளத்தையோ பயன்படுத்துவர். விவரம் அறிந்த பயனராயின் Trivago, Policybazaar போன்ற தளத்தின் மூலம் வாங்கும் முடிவை (puchase decision) மேற்கொள்வர்.


அப்போ Online வர்த்தகத்தில் சமூக வலைத்தளங்களின் பங்கு என்ன?

பெரும்பான்மையான நிறுவனங்களின் வணிகம் Facebook-க்கிலோ Instagram-மிலோ நடப்பதில்லை. மாறாக தங்களின் உத்தேச வாடியாளர்களை (prospective customers) ஈர்த்து தங்கள் நிறுவனத்தை பற்றியும் தயாரிப்புகளை பற்றியும் அவர்கள் அறிய செய்வதே அதன் முதன்மையான நோக்கமாக இருக்கும். உங்கள் நிறுவனத்தில் புதிய தயாரிப்புகள், தயாரிப்புகளை பற்றிய வாடிக்கையாளர்களின் விமர்சனங்கள், விமர்சன வீடியோக்கள், விளம்பர விடியோக்கள் போன்றவற்றை பதிவிடலாம். உங்கள் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள் வாடிக்கையாளர்களை உடனுக்குடன் சென்றடைய இது உதவும்.

இத்தகைய பதிவுகளை சீரான இடைவெளியில் பதிவிட்டு வருதல் அவசியம். அப்போதுதான் வாடிக்கையாளர்களின் நினைவில் தொடர்ந்து நாம் இருக்க இயலும். ஒருவேளை அத்தகைய புதிய தகவலோ செய்தியோ இல்லையெனில் என்ன செய்யலாம்? 

அதற்கு உதவுவதுதான் இந்த user engagement posts எனப்படும் ஈடுபாட்டு பதிவுகள்.

ஈடுபாட்டு பதிவுகள் என்றால் என்ன?

நேரடியாக நமது நிறுவனத்தை பற்றியோ தயாரிப்புகளை பற்றியோ பேசாமல், நமது வாடிக்கலகையாளர்களை கவரும் வகையில் போடப்படும் பதிவுகளை, ஈடுபாட்டு பதிவுகளாக வகைப்படுத்தலாம். உதாரணமாக ஒரு குழந்தைகளுக்கான பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் இந்த வீடியோவை பதிவிடலாம்.


உங்கள் பதிவின் நோக்கம்:

ஈடுபாட்டு பதிவின் நோக்கம் நேரடி வியாபாரமோ வருமானமோ அல்ல. அதன் நோக்கம் ...
  • பதிவின் பகிரும் தன்மை எனப்படும் shareability நன்றாக இருக்கவேண்டும் 
  • உங்கள் வாடிக்கையாளரின் எண்ண ஓட்டத்தை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும்.
  • பார்வையாளர்களின் ஈடுபாட்டை(Engagement) பெறும் தன்மை அதாவது like, click அல்லது video views பெற தூண்டுவதாக இருக்க வேண்டும்.

என்ன மாதிரியான பதிவுகளை போடலாம் என்பதற்கு, அரசியல் பேசும் டீக்கடைக் காரரையோ, வீட்டு குறிப்புகள் கொடுக்கும் மளிகை கடை அண்ணாச்சியையோ உதாரணமாக கொள்ளலாம். அதாவது நாம் ஒவ்வொரு முறை கடைக்கு செல்லும்போதும் இவர்கள் தங்கள் பொருளை விற்பனை செய்வது குறித்து மட்டுமே பேசுவதில்லை. மாறாக நமக்கு சுவாரசியமான அல்லது பயனுள்ள விஷயங்களையோ பேசுவர். இதுவே நாம் அக்கடைக்கு தொடர்ந்து செல்ல தூண்டும்.

எனவே நீங்களும் ஒரு User Engagement post-ஐ முயற்சி செய்து பாருங்களேன்...


உங்கள் கருத்துகள் / விமர்சனங்கள் / பரிந்துரைகளை கீழே உள்ள comment box-இல் பகிருங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக