பேஸ்புக் குரூப் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பேஸ்புக் குரூப் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 20 ஏப்ரல், 2019

வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஈடுபாட்டு பதிவுகள் [User Engagment Posts]

நீங்கள் Facebook போன்ற சமூக வலைத்தளங்களில் மூலம் உங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகளை விற்க முனைவோரா? இதை கவனத்தில் கொள்ளுங்கள்.
Facebook பயனர் பெரும்பாலும் எந்த பொருளையும் வாங்கும் நோக்கில் இங்கு வரவில்லை.
பெரும்பான்மையான நேரங்களில் அவர் பொழுதுபோக்கிற்க்காகவோ, நண்பர்களுடன் நேரம் செலவிடுவதற்க்காகவோ அல்லது நண்பர்களின் பதிவுகளை காண்பதற்க்காகவோதான் login செய்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


ஒரு பொருளை வாங்க எண்ணும் பயனர் பொதுவாக Amazon, Flipkart போன்ற ecommerce தளங்களையோ அல்லது அந்நிறுவனத்தின் தளத்தையோ பயன்படுத்துவர். விவரம் அறிந்த பயனராயின் Trivago, Policybazaar போன்ற தளத்தின் மூலம் வாங்கும் முடிவை (puchase decision) மேற்கொள்வர்.


அப்போ Online வர்த்தகத்தில் சமூக வலைத்தளங்களின் பங்கு என்ன?

பெரும்பான்மையான நிறுவனங்களின் வணிகம் Facebook-க்கிலோ Instagram-மிலோ நடப்பதில்லை. மாறாக தங்களின் உத்தேச வாடியாளர்களை (prospective customers) ஈர்த்து தங்கள் நிறுவனத்தை பற்றியும் தயாரிப்புகளை பற்றியும் அவர்கள் அறிய செய்வதே அதன் முதன்மையான நோக்கமாக இருக்கும். உங்கள் நிறுவனத்தில் புதிய தயாரிப்புகள், தயாரிப்புகளை பற்றிய வாடிக்கையாளர்களின் விமர்சனங்கள், விமர்சன வீடியோக்கள், விளம்பர விடியோக்கள் போன்றவற்றை பதிவிடலாம். உங்கள் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள் வாடிக்கையாளர்களை உடனுக்குடன் சென்றடைய இது உதவும்.

இத்தகைய பதிவுகளை சீரான இடைவெளியில் பதிவிட்டு வருதல் அவசியம். அப்போதுதான் வாடிக்கையாளர்களின் நினைவில் தொடர்ந்து நாம் இருக்க இயலும். ஒருவேளை அத்தகைய புதிய தகவலோ செய்தியோ இல்லையெனில் என்ன செய்யலாம்? 

அதற்கு உதவுவதுதான் இந்த user engagement posts எனப்படும் ஈடுபாட்டு பதிவுகள்.

ஈடுபாட்டு பதிவுகள் என்றால் என்ன?

நேரடியாக நமது நிறுவனத்தை பற்றியோ தயாரிப்புகளை பற்றியோ பேசாமல், நமது வாடிக்கலகையாளர்களை கவரும் வகையில் போடப்படும் பதிவுகளை, ஈடுபாட்டு பதிவுகளாக வகைப்படுத்தலாம். உதாரணமாக ஒரு குழந்தைகளுக்கான பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் இந்த வீடியோவை பதிவிடலாம்.


உங்கள் பதிவின் நோக்கம்:

ஈடுபாட்டு பதிவின் நோக்கம் நேரடி வியாபாரமோ வருமானமோ அல்ல. அதன் நோக்கம் ...
  • பதிவின் பகிரும் தன்மை எனப்படும் shareability நன்றாக இருக்கவேண்டும் 
  • உங்கள் வாடிக்கையாளரின் எண்ண ஓட்டத்தை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும்.
  • பார்வையாளர்களின் ஈடுபாட்டை(Engagement) பெறும் தன்மை அதாவது like, click அல்லது video views பெற தூண்டுவதாக இருக்க வேண்டும்.

என்ன மாதிரியான பதிவுகளை போடலாம் என்பதற்கு, அரசியல் பேசும் டீக்கடைக் காரரையோ, வீட்டு குறிப்புகள் கொடுக்கும் மளிகை கடை அண்ணாச்சியையோ உதாரணமாக கொள்ளலாம். அதாவது நாம் ஒவ்வொரு முறை கடைக்கு செல்லும்போதும் இவர்கள் தங்கள் பொருளை விற்பனை செய்வது குறித்து மட்டுமே பேசுவதில்லை. மாறாக நமக்கு சுவாரசியமான அல்லது பயனுள்ள விஷயங்களையோ பேசுவர். இதுவே நாம் அக்கடைக்கு தொடர்ந்து செல்ல தூண்டும்.

எனவே நீங்களும் ஒரு User Engagement post-ஐ முயற்சி செய்து பாருங்களேன்...


உங்கள் கருத்துகள் / விமர்சனங்கள் / பரிந்துரைகளை கீழே உள்ள comment box-இல் பகிருங்கள்

வியாழன், 23 நவம்பர், 2017

மொத்த வணிக (B2B business) வாடிக்கையாளர்களை பெற உதவும் Facebook Groups

பொருட்களை தயாரிக்கும் உற்பத்தியாளரா நீங்கள்? அல்லது புதிய வகை பொருட்களை விற்கும் மொத்த வணிகரா? உங்கள் பொருட்களை சந்தை படுத்த மற்றும் விருப்பமுள்ள சில்லறை வணிகர்களை பெற உதவுகிறது Facebook Groups.

Facebook Groups helping wholesale / B2B sales - banner

முதலில் உங்கள் Facebook account-ல் login செய்து கொள்ளுங்கள். பின்னர் மேலே உள்ள search box-ல் உங்கள் ஊர், நகரம் அல்லது மாவட்டப் பெயரை உள்ளிட்டு search செய்யவும். பொதுவாக எல்லா நகருக்கும் அந்தந்த பகுதி வியாபாரிகள் இணைந்து Group உருவாக்கி இருப்பர். அவை ...wholeseller, ...Business, ...market  போன்ற பெயர்களை கொண்டதாக இருக்கும். உதாரணமாக Coimbatore Business Club, Coimbatore Market place, Coimbatore Shoppings / Selling / Realestate Online போன்ற group-களில் உறுப்பினராகி உங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகள் குறித்த பதிவிடலாம்.

உங்கள் பொருட்களை வெளியூர்களுக்கு அனுப்பும் (அதாவது shipping service) வழங்குகிறீர்கள் எனில், நீங்கள் மற்ற நகரங்களின் மற்றும் மாநிலவரியான Group-களிலும் பதிவிடலாம். வெளியூர்களுக்கு அனுப்பும்பொழுது ஏற்படும் சவால் என்னவெனில், நம்மிடமிருந்து பொருட்களை வாங்குபவர்கள் யார் என்று நமக்கு தெரியாது.ஆகையால் பொருட்களுக்கான தொகை பெற்ற பின்னர் பார்சலை அனுப்பவும். அல்லது Cash-on-Delivery (சுருக்கமாக COD) முறையில் அனுப்பலாம்.

அதேபோல், Facebook Group-களின் மூலம் பொருட்களை வாங்க வாடிக்கையாளர்கள் தயங்க காரணம், விற்பவர்களின் நம்பகத்தன்மை குறித்த ஐயம். வணிகர் எனும் போர்வையில் மோசடி ஆசாமிகள் சிலர் பொருட்களின் புகைப்படங்களை பதிவிட்டு, பணத்தை பெற்று கொண்டு கம்பிநீட்டிவிடுகின்றனர் என்பதுதான் இந்த அச்சத்துக்கு காரணம். உங்கள் நம்பகத்தன்மையை வாடிக்கையாளர்கள் அறிய நீங்கள் என்ன செய்யலாம்?
  • உங்கள் பொருட்களை பற்றி பதிவிடும்போது அவற்றுடன் நீங்களும் இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிடலாம்.
  • உங்க இருப்பிடம் அல்லது கடையின் முகவரி, தொலைபேசி எண், போன்றவற்றை தெளிவாக குறிப்பிடவும்.
  • பொருட்களின் புகைப்படத்தை இணையத்தில் எங்கிருந்தாவது எடுத்து பதிவிடாமல், நேரடியாக நீங்களே எடுத்து பதிவிடவும்.
  • மன நிறைவடைந்த உங்கள் வாடிக்கையாளர்களின் கருத்துக்களை இணைத்து பதிவிடலாம்.
  • Facebook page மூலம் உங்கள் வணிக செயல்பாடுகள் குறித்து பதிவிடலாம். 
Facebook-ல் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவது அவ்வளவு முக்கியமானதா? ஆம் என்கிறது விகடன் நிறுவவனத்தினர் சமீபத்தில் நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவுகள். இதில் பங்கேற்றவர்களில் 50% மேற்பட்டோர் Facebook-ல் பகிரப்படும் தகவல்களில் நம்பகத்தன்மை இல்லையென கருத்து தெரிவித்துள்ளனர். ஆகவே, இவற்றை மனதில் கொண்டு Facebook Group-ஐ பயன்படுத்தி பயனடையுங்கள்.

உங்கள் வணிகத்துக்கு Facebook-ஐ வேறு எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம் என அறிந்து கொள்ள இந்த பதிவை படிக்கவும்.