வெள்ளி, 5 ஜனவரி, 2018

உங்கள் தயாரிப்புகளை பிரபலப்படுத்தும் video-வை தயாரிப்பது எப்படி?

நீங்கள் ஒரு புதிய பொருளை தயாரிப்பவரா? மக்கள் தேவை, வசதிக்கேற்ப மாற்றம் செய்யப்பட்ட தயாரிப்புகளை விற்பவர்களா? அல்லது ஏற்கனவே சந்தையில் உள்ள பொருட்களையே மலிவான விலையில் தயாரித்து விற்பவரா? உங்கள் தொழில் வெற்றிபெற வாழ்த்துக்கள். உங்களை போன்ற  தொழில் முனைவோர்களுக்கு உள்ள பொதுவான சவால், உங்கள் தயாரிப்பு அல்லது சேவையின் புதுமை மற்றும் தனித்துவமான அனுபவங்களை நுகர்வோர்களிடம் கொண்டு சேர்ப்பது. இதை சமாளிக்க சிறந்த உத்தி, காணொளி சந்தைப்படுத்தல் (Video Marketing).
Video Marketing

ஏன் video தேவை?

 • ஒரு தயாரிப்பை எளிமையாகவும் தெளிவாகவும் விளக்க கூடியது.
 • குறைந்த செலவில் நிறைவான வருமானத்தை  பெற்றுத் தரக்கூடியது .
 • நுகர்வோர்களுக்கு நம்பகமானது.
 • அதிகம் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவது.
இந்த அடிப்படையானா அனுகூலங்களுடன், உங்கள் video-வில் பகிரப்படும் தகவல்களை பொறுத்து கூடுதல் பலன்களை பெறலாம்.

என்ன video பகிரலாம்:

பொதுவாக வணிக நிறுவனங்கள் பின்வருவனவற்றில் ஏதாவது ஒருவகை வீடியோவை பகிர்வர்.
 • தங்கள் தயாரிப்பு அல்லது சேவையின் செயல் விளக்கம் - Demo Video
 • தங்கள் தயாரிப்பை பற்றிய நுகர்வோரின் சந்தேகங்களும் அதற்க்கான விளக்கங்களும் - Q&A video
 • வாடிக்கையாளர் விமர்சனங்கள் - customer review
 • தயாரிப்பின் திறப்பு மற்றும் பயன்படுத்தும் முறை - Unboxing and Hands-on review
இத்துடன் உங்கள் தயாரிப்பின் பிரத்தியேக தேவைக்கேற்ப video-க்களை தயாரித்து வெளியிடலாம்.

Video-க்கள் நுகர்வோர்களிடம் சென்றடைவது எப்படி?

நீங்க தயாரித்த video-வை சமூக வலைத்தளங்கள் மூலமாக நுகர்வோர்களிடம் கொண்டு சேர்க்கலாம். உதாரணமாக, உங்கள் Facebook timeline-ல் share செய்யலாம், உங்கள் நிறுவனத்தின் Facebook பக்கத்தில் பதிவிடலாம், Facebook Group-களில் பகிரலாம், Whatsapp-ல் பகிரலாம், Youtube மூலமாக அணைத்து தளங்களிலும் embed செய்யலாம். அதுவும் கட்டணம் ஏதும் இல்லாமல்.

Jayaraj
சென்னையை சேர்ந்த திரு.ஜெயராஜ், இந்த முறையில் வெற்றிகரமாக தனது புதிய தயாரிப்பை பிரபலப்படுத்தி வருகிறார். தினமும் இருட்டிய உடன் தானாகவே எரியும் வகையில் LED பல்புகளை தயாரித்து Smart Lite என்ற பெயரில் விற்பனை செய்து வருகிறார். இவர் தனது bulb எப்படி வேலை செய்கிறது, அதன் சிறப்பம்சங்கள் என்ன போன்றவற்றை ஒரு எளிய செயல்விளக்க (demo) வீடியோவை வெளியிட்டார். இதனை தனது Smart Lite Facebook பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். இவரது டெமோ விடியோவை பார்த்து ஒரு சில நுகர்வோர்களும் மொத்த வியாபாரிகளும் தொடர்பு கொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து நுகர்வோர்களுக்கு உள்ள ஐயங்களை விளக்கி, அதையும் Q&A video-வாக பதிவிட்டுள்ளார். இவரின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்குவோம்.

இதை போல உங்கள் நிறுவனத்தின் தயாரிப்பையும் video marketing செய்ய வேண்டுமா? அப்போது நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில  விஷயங்கள் என்னென்ன? அந்த video-வை குறைத்த செலவில் நீங்களே எப்படி தயாரிப்பது? இந்த video அதிகமாக பகிரப்பட்டு மேலும் பல நுகர்வோரை சென்றடைவது எப்படி? இவற்றை அறிய எனது அடுத்த பதிவை படியுங்கள்.

உங்கள் கருத்துக்கள் / விமர்சனங்கள் / பரிந்துரைகளை கீழே உள்ள comment box-இல் பகிருங்கள்

வியாழன், 23 நவம்பர், 2017

மொத்த வணிக (B2B business) வாடிக்கையாளர்களை பெற உதவும் Facebook Groups

பொருட்களை தயாரிக்கும் உற்பத்தியாளரா நீங்கள்? அல்லது புதிய வகை பொருட்களை விற்கும் மொத்த வணிகரா? உங்கள் பொருட்களை சந்தை படுத்த மற்றும் விருப்பமுள்ள சில்லறை வணிகர்களை பெற உதவுகிறது Facebook Groups.

Facebook Groups helping wholesale / B2B sales - banner

முதலில் உங்கள் Facebook account-ல் login செய்து கொள்ளுங்கள். பின்னர் மேலே உள்ள search box-ல் உங்கள் ஊர், நகரம் அல்லது மாவட்டப் பெயரை உள்ளிட்டு search செய்யவும். பொதுவாக எல்லா நகருக்கும் அந்தந்த பகுதி வியாபாரிகள் இணைந்து Group உருவாக்கி இருப்பர். அவை ...wholeseller, ...Business, ...market  போன்ற பெயர்களை கொண்டதாக இருக்கும். உதாரணமாக Coimbatore Business Club, Coimbatore Market place, Coimbatore Shoppings / Selling / Realestate Online போன்ற group-களில் உறுப்பினராகி உங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகள் குறித்த பதிவிடலாம்.

உங்கள் பொருட்களை வெளியூர்களுக்கு அனுப்பும் (அதாவது shipping service) வழங்குகிறீர்கள் எனில், நீங்கள் மற்ற நகரங்களின் மற்றும் மாநிலவரியான Group-களிலும் பதிவிடலாம். வெளியூர்களுக்கு அனுப்பும்பொழுது ஏற்படும் சவால் என்னவெனில், நம்மிடமிருந்து பொருட்களை வாங்குபவர்கள் யார் என்று நமக்கு தெரியாது.ஆகையால் பொருட்களுக்கான தொகை பெற்ற பின்னர் பார்சலை அனுப்பவும். அல்லது Cash-on-Delivery (சுருக்கமாக COD) முறையில் அனுப்பலாம்.

அதேபோல், Facebook Group-களின் மூலம் பொருட்களை வாங்க வாடிக்கையாளர்கள் தயங்க காரணம், விற்பவர்களின் நம்பகத்தன்மை குறித்த ஐயம். வணிகர் எனும் போர்வையில் மோசடி ஆசாமிகள் சிலர் பொருட்களின் புகைப்படங்களை பதிவிட்டு, பணத்தை பெற்று கொண்டு கம்பிநீட்டிவிடுகின்றனர் என்பதுதான் இந்த அச்சத்துக்கு காரணம். உங்கள் நம்பகத்தன்மையை வாடிக்கையாளர்கள் அறிய நீங்கள் என்ன செய்யலாம்?
 • உங்கள் பொருட்களை பற்றி பதிவிடும்போது அவற்றுடன் நீங்களும் இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிடலாம்.
 • உங்க இருப்பிடம் அல்லது கடையின் முகவரி, தொலைபேசி எண், போன்றவற்றை தெளிவாக குறிப்பிடவும்.
 • பொருட்களின் புகைப்படத்தை இணையத்தில் எங்கிருந்தாவது எடுத்து பதிவிடாமல், நேரடியாக நீங்களே எடுத்து பதிவிடவும்.
 • மன நிறைவடைந்த உங்கள் வாடிக்கையாளர்களின் கருத்துக்களை இணைத்து பதிவிடலாம்.
 • Facebook page மூலம் உங்கள் வணிக செயல்பாடுகள் குறித்து பதிவிடலாம். 
Facebook-ல் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவது அவ்வளவு முக்கியமானதா? ஆம் என்கிறது விகடன் நிறுவவனத்தினர் சமீபத்தில் நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவுகள். இதில் பங்கேற்றவர்களில் 50% மேற்பட்டோர் Facebook-ல் பகிரப்படும் தகவல்களில் நம்பகத்தன்மை இல்லையென கருத்து தெரிவித்துள்ளனர். ஆகவே, இவற்றை மனதில் கொண்டு Facebook Group-ஐ பயன்படுத்தி பயனடையுங்கள்.

உங்கள் வணிகத்துக்கு Facebook-ஐ வேறு எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம் என அறிந்து கொள்ள இந்த பதிவை படிக்கவும்.

செவ்வாய், 7 நவம்பர், 2017

Online-ல் சுட்டிகளுக்கான வண்ணம் தீட்டும் சுருள்களை விற்கும் Inkmeo

நீங்கள் மக்கள் தேவையை உணர்ந்து புதுமையான பொருட்களை விற்கிறீர்களா? அப்பொழுது நீங்கள் உங்கள் பொருளை Online-ல் விற்பதன் மூலம் நிறைவான லாபத்தை ஈட்ட முடியும். அப்படி தன் Inkmeo என பெயரிடப்பட்ட வண்ணம் தீட்டும் சுருள்களை Online-ல் விற்பனை செய்து அசத்தி வருகிறது Magicbox Publications என்ற சென்னையை சேர்ந்த நிறுவனம்.


MagicBox நிறுவனம் குழந்தைகளுக்கான பாடல்கள் அடங்கிய CD மற்றும் DVD விற்பனை, Youtube Channel போன்றவற்றில் அனுபவம் வாய்ந்தது. தனது தயாரிப்புகளை Online-லேயே விற்பனை செய்து வருகிறது. "Online-ல் விற்பனை செய்வதன் மூலம் மொத்த விற்பனையாளர்கள் தவிர்த்து நேரடியாக வாடிக்கையாளர்களை சென்றடைகிறோம். அதனால்தான் எங்களால் குறைந்த விலையில் நிறைவான தரத்துடன் பொருட்களை தயாரிக்க முடிகிறது" என்கிறார் இதன் நிறுவனர் திரு.சதீஷ் குப்தா.

அடுத்த கட்டமாக, சுவற்றில் கிறுக்கும் வழக்கம் உள்ள குழந்தைகளின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வண்ணமாக தனது அடுத்த தயாரிப்பை வெளியிட்டுள்ளது இந்நிறுவனம். பேனா, பென்சில், க்ரயான் என தன் கையில் கிடைத்தவற்றையெல்லாம் வைத்து சுவற்றில் கிறுக்குவதே பெரும்பாலான குழந்தைகளின் பொழுதுபோக்கு. இவர்கள் சுவர்களை கரையாக்காமல் பாதுகாக்க, அதே சமயம் குழந்தையின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் உருவாக்கப் பட்டதே, Inkmeo Wall Colouring Rolls எனப்படும் வண்ணம் தீட்டும் சுருள்கள்.

இது ஒரு 7 அடி நீள மற்றும் 1 அடி உயரமுள்ள காகிதத்தால் செய்யப்பட்ட Colouring roll ஆகும். இதனுடன் 12 வண்ண Crayon Set, 6 இருபக்கமும் ஒட்டக்கூடிய stickers மற்றும் Inkmeo branded stickers ஆகியவையும் வழங்கப்படும். இதன் மற்றும் ஒரு சிறப்பம்சம், இதனோடு இணைந்து  செயல்படக்கூடிய Inkmeo - Augmented Realty App ஆகும். இந்த இலவச App-ஐ உங்கள் iOS அல்லது Android மொபைலில் install செய்து, அதன் மூலம் வண்ணம் தீட்டப் படாத Inkmeo சுருளை Scan செய்து பாருங்கள். என்ன மாயம்! இந்த சுருளின் கருப்பு-வெள்ளை தாளும் App-ல் வண்ணமயமாக காட்சியளிக்கிறது.

Inkmeo சுருள்கள் தாய்மார்களிடையே பலத்த வரவேற்பை பெற்றிருக்கிறது. வீட்டிற்குள் குழந்தை தொலைக்காட்சி அல்லது மொபைலை பார்த்துக்கொண்டே இருக்காமல், அவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் சுவாரசியமான செயல்பாடுகளில் ஈடுபட வைப்பதில் வெற்றி கண்டுள்ளனர் இந்த தாய்மார்கள். அவர்கள் தங்கள் அனுபவங்களை Facebook, Youtube போன்ற சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து வருகின்றனர். இதை பயன் படுத்தும் முறை குறித்த சிறு Demo விடியோவை காண இங்கு click செய்யவும்.

2 முதல் 8 வயது வரையுள்ள பெற்றோர்களில் தேவை அறிந்து தயாரிக்கபட்டுள்ள Inkmeo - Wall Colouring Roll-கள், 12 விதமான theme-களில் கிடைக்கின்றன. "அடுத்த கட்டமாக தொழில் முனையும் தாய்மார்கள் (Mompreneurs) மூலமாக சந்தையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம்" என்கிறார் சதிஷ்.

தாய்மார்கள் மூலம் இவர்கள் எவ்வாறு சந்தை படுத்துகிறார்கள், இணையம் மற்றும் சமூக வலைத்தளம் மூலம் சந்தைப்படுத்த இவர்கள் பயன்படுத்தும் உத்திகள் என்னென்ன போன்றவற்றை எனது அடுத்த பதிவில் காண்போம்.

உங்கள் கருத்துக்கள் / விமர்சனங்கள் / பரிந்துரைகளை கீழே உள்ள comment box-இல் பகிருங்கள்